விழுப்புரத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் விதி 377 இன் கீழ் நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் வலியுறுத்தல்

Views : 1097

பதிவு செய்த நாள் 11-Feb-2020

10.02.2020 அன்று விதி 377 இன் கீழ் பின்வரும் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பினார்: 

“விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் பல பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் அவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் உருவாகி வருகிறார்கள். விழுப்புரம் என்பது சாலை மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது NH 45 மூலம் சென்னையோடும் NH 234 மூலமாக மங்களூருடனும் இணைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் மின்மயமாக்கப்பட்ட டபுள் பி ஜி லைன் மூலமாக ரயில்வே இணைப்பும் உள்ளது. இதன் அருகாமையில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பாண்டிச்சேரியில் விமான நிலையம் உள்ளது. எனவே விமான மார்க்கமாகவும் விழுப்புரம் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கு பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகவும் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காகவும் ஒரு ஐடி பார்க் அமைக்க வேண்டும். அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்கனவே பல்வேறு ஐடி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. அவற்றை மிகவும் எளிதாக விழுப்புரத்துக்கு விரிவுபடுத்த முடியும்” என்று ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.