திருநள்ளாறு: ஆரியக்கூத்து ஆட மூன்றுவேலி நிலம் - ரவிக்குமார்

Views : 8

பதிவு செய்த நாள் 03-Jul-2025

திருநள்ளாறு கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் புகைப்படங்களோடு அவற்றின் வாசகங்களை நூலாக வெளியிட்டிருக்கிறது அக்கோயில் நிர்வாகம். பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளியில் முதுநிலை ஆய்வாளராக உள்ள டாக்டர் கோ.விசயவேணுகோபால் கல்வெட்டுகளைப் படியெடுத்து வாசித்து, பதிப்பித்திருக்கிறார். 

நள்ளாறு என்ற ஆற்றின் பெயரைக்கொண்டு திருநள்ளாறு என அவ்வூர் வழங்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடும் பதிப்பாசிரியர், அது பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரம்ம தேசமாக இருந்ததைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன என்கிறார். 

அக்கோயிலில் பொ.ஆ 1053 ல் ஆரியக் கூத்து என்னும் நாடகம் நிகழ்ந்ததை ஒரு கல்வெட்டின்மூலம் பதிப்பாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். 

“மாசியிலும், வைகாசியிலும் இந்த நாடகத்தை நிகழ்த்துவதற்காக மூன்று வேலி நிலம் அந்த நாடகக்குழுவுக்கு தரப்பட்டது. நாடகம் ஆடப்படும் நாட்களில் உணவுக்காக 20 கலம் நெல்லும், ஒப்பனை செய்துகொள்ளும் செலவுக்காக எண்ணெய்யும், மாவும் வழங்கப்பட்டன “ என்று கல்வெட்டு கூறுகிறது. 

கூத்து ஆடியவர்களுக்கு மூன்று வேலி நிலம் தந்த ஆட்சியாளர்கள் அந்த நிலத்தை உழைத்துத் திருத்திய மக்களுக்கு நிலம் அளித்ததாக ஒரு கல்வெட்டும் இல்லை. 

கூத்தாடுபவர்களுக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட முன்னுரிமை இன்றும் கூடத் தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளில் இதுவும் ஒன்றா?