அஞ்சல் சேமிப்பு திட்டங்களின் டிஜிட்டல் மாற்றம் - டாக்டர் டி. ரவி குமார்

Views : 13

பதிவு செய்த நாள் 14-Feb-2026

தொடர்புத் துறை அமைச்சரிடம் கேட்கப்படுகிறது:

(a) இந்திய அஞ்சல் துறை 1.64 இலட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்களை இயக்கி, 45 கோடிக்கும் அதிகமான அஞ்சல் சேமிப்பு வங்கி (POSB) கணக்குதாரர்களுக்கு சேவை வழங்கி வருவது குறித்து அரசு அறிகிறதா; மேலும் அணுகல் எளிதாக்கம், வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி உட்சேர்க்கையை மேம்படுத்த அஞ்சல் சேமிப்பு திட்டங்களை நவீனமயமாக்கி டிஜிட்டல் மாற்றம் செய்த நடவடிக்கைகள் என்னென்ன? அவற்றின் விவரங்கள் என்ன?

(b) 100% அஞ்சல் நிலையங்கள் மைய வங்கி தீர்வு (CBS) அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, இந்திய அஞ்சல் கட்டண வங்கி (IPPB) தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளனவா; இதன் மூலம் ஆன்லைன் வைப்பு, பணம் எடுப்பு, நிதி பரிமாற்றம், நேரடி இருப்பு விசாரணை போன்ற சேவைகள் வழங்கப்படுகிறதா? ஆம் எனில், அதன் விவரங்கள் என்ன?

(c) முழுமையான டிஜிட்டல் ஒருங்கிணைப்புக்கு வெளியே ஏதேனும் அஞ்சல் நிலையங்கள் உள்ளனவா? இருந்தால், அதற்கான காரணங்கள் என்ன? அவற்றை நிறைவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட திட்டம் உள்ளதா?

(d) புதிய டிஜிட்டல் தளங்கள், மொபைல் செயலிகள் மற்றும் காகிதமற்ற சேவைகள் (IPPB மொபைல் வங்கி உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனவா? இவை தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்ரா (KVP), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) போன்ற திட்டங்களில் பரிவர்த்தனைகளை எளிதாக்கியுள்ளனவா? ஆம் எனில், அதன் விவரங்களும் தாக்கங்களும் என்ன?

பதில்

தொடர்புத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி இராஜ்ய மந்திரி

(டாக்டர் பெம்மசானி சந்திர சேகர்):

(a) & (b): ஆம். அஞ்சல் துறை 1.64 இலட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் மூலம் 45 கோடிக்கும் அதிகமான POSB கணக்குதாரர்களுக்கு சேவை வழங்குகிறது. அஞ்சல் சேமிப்பு திட்டங்களை நவீனமயமாக்கி, மைய வங்கி தீர்வு (CBS) அமைப்புடன் இணைத்து, ATM, இணைய வங்கி, மொபைல் வங்கி, ஆன்லைன் கணக்கு திறப்பு/மூடல், வைப்பு, நேரடி இருப்பு விசாரணை, NEFT/RTGS மூலம் நிதி பரிமாற்றம், IPPB-POSA இணைப்பு போன்ற டிஜிட்டல் சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்திய அஞ்சல் கட்டண வங்கி (IPPB) சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள், மெய்நிகர் டெபிட் கார்டு, உள்நாட்டு பண பரிமாற்றம், பில் மற்றும் மின்சார கட்டணங்கள், IPPB வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு சேவைகள், அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான ஆன்லைன் கட்டணம், டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் (DLC), ஆதார் இயங்கும் பணப் பரிவர்த்தனை அமைப்பு (AePS), மொபைல் எண் புதுப்பிப்பு, 0-5 வயது குழந்தைகளுக்கான ஆதார் பதிவு சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. இச்சேவைகள் அணுகல் எளிதாக்கம், வெளிப்படைத் தன்மை மற்றும் நிதி உட்சேர்க்கையை மேம்படுத்துகின்றன.

(c) இல்லை. அனைத்து அஞ்சல் நிலையங்களும் டிஜிட்டல் தளத்தில் செயல்படுகின்றன.

(d) இணைய வங்கி மூலம் தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), கிசான் விகாஸ் பத்ரா (KVP), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) போன்ற திட்டங்களின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்கள் வாடிக்கையாளர்களின் வசதியையும் சேவை எளிமையையும் மேம்படுத்தியுள்ளன.