இந்திய புள்ளியியல் நிறுவன சட்ட மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும்

Views : 13

பதிவு செய்த நாள் 06-Nov-2025

ஒன்றிய அமைச்சருக்கு 


ஐ.எஸ்.ஐ என சுருக்கமாக அறியப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் ( Indian Statistical Institute) சட்டத்தை ரத்து செய்துவிட்டு அதை அரசாங்கப் பிரதிநிதிகள் கொண்ட அமைப்பாக மாற்றி அமைப்பதற்கு ஒன்றிய அரசு புதிய சட்ட மசோதா ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி இன்று புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். 


அந்த நிறுவனத்தின் கல்வி சார்ந்த செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதனுடைய தன்னாட்சி தன்மையைக் கெடுப்பதாகவும் இந்த மசோதா இருக்கிறது. தற்போது அதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. அதையும் மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஐ.எஸ்.ஐ நிறுவனத்துக்கு இனிமேல் ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக மாணவர்களுடைய கல்விக் கட்டணத்திலிருந்து நிதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்த மசோதாவில் கூறியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் ஆய்வு நோக்கம் பாழ்படுத்தப்பட்டு முழுமையாக அது வணிக மயமாக்கப்படும் . எனவே, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் உண்மையிலேயே இந்த நிறுவனத்தை மேம்படுத்த விரும்பினால் அதற்கான சட்ட திருத்தத்தை ஏற்கனவே உள்ள சட்டத்தில் செய்து கொள்ளலாம் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.


- ரவிக்குமார் எம்.பி