மாநில மறுசீரமைப்பும் தொகுதி மறு சீரமைப்பும்

Views : 38

பதிவு செய்த நாள் 03-Nov-2025

மொழிவாரி மாநில உருவாக்க நாளான இன்று உளுந்தூர்பேட்டையில் விசிக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘மொழியும் நிலமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன். பாவலர் அறிவுமதி பங்கேற்று உரையாற்றினார். 


“ இப்போது இந்திய மக்கள் தொகையில் 16.5% மக்கள் உத்தரப்பிரதேசம் உள்ளது. 2050 இல் அது இந்திய மக்கள் தொகையில் 25% கொண்ட மாநிலமாக இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைபொஉ செய்யப்பட்டால் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வு உண்டாகும். இந்தியாவை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவரே நிரந்தரமாக ஆளும் நிலைக்கு அது இட்டுச் செல்லும். 


2011 ஆம் ஆண்டு செல்வி மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிப்பதற்கு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பினார். அது இதுவரை ஏற்கப்படவில்லை. அதை நிறைவேற்றவேண்டும். தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன் இந்த மாநில மறு சீரமைப்பை ஒன்றிய அரசு செய்யவேண்டுமென நாம் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் தொகுதி மறு சீரமைப்பில் வட இந்திய மேலாதிக்கத்தை நாம் தடுக்க முடியும்” என எனது பேச்சில் வலியுறுத்தினேன்.


மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, நீதிவள்ளல் ; வெளிச்சம் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.