பொருளாதார வளர்ச்சி யாருக்கு? -ரவிக்குமார் எம்.பி

Views : 8

பதிவு செய்த நாள் 13-Oct-2025

பொருளாதார வளர்ச்சியில் சமூகக் குழுக்கள் எவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியில் ( 04.10.2025 பக்கம் 58-64) ஆய்வுக் கட்டுரையொன்று வெளியாகியுள்ளது. எஸ்சி, எஸ்டி. ஓபிசி பிரிவுகள் ஒவ்வொன்றையும் பொருளாதார வளர்ச்சியில் உள்வாங்கியிருக்கும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இல்லை. ஆனால், இதர பிரிவினரை (others) உள்ளடக்கிய டாப் 5 மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என அந்தக் கட்டுரை கூறுகிறது ( பார்க்க: இணைப்பில் உள்ள அட்டவணை). 


பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது எனப் பெருமைப் படுகிறோம். ஆனால், அந்த வளர்ச்சியில் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினர் போதுமான அளவில் உள்ளடக்கப்படவில்லை. 


இந்த ஆய்வு 2019 டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட AIDIS சர்வே தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகான திமுக ஆட்சியில் இந்த நிலை மாறியிருக்கிறதா என்பதை 

மாண்புமிகு நிதி அமைச்சர் @TThenarasu அவர்களும், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் @DrJeyaranjan அவர்களும்தான் கூற வேண்டும். 


- ரவிக்குமார் எம்.பி 


#Financial_Inclusion #SC_ST_OBC