மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக இருக்க வேண்டும்

Views : 10

பதிவு செய்த நாள் 13-Oct-2025

1978 இல் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் நூற்றாண்டின்போது தெருப் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகளை நீக்கி அன்றையத் தமிழ்நாடு அரசு அரசாணைப் பிறப்பித்தது ( அரசாணை எண் 1531 நாள் 03.10.1978 ) அப்போது சென்னையில் தெருக்களின் பெயர்களில் சாதிப் பின்னொட்டுகள் நீக்கப்பட்டன. அப்போதும் இதுபோன்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதைப் புறக்கணித்துவிட்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அந்த அரசாணையைச் செயல்படுத்தினார். இன்றைய முதலமைச்சர் @mkstalin அவர்களும் அத்தகைய வாதங்களைப் புறந்தள்ளித் தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். #ஜிடி_பாலம் 


- ரவிக்குமார் எம்.பி