தோழர் து.ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள் - ரவிக்குமார் எம்.பி

Views : 69

பதிவு செய்த நாள் 26-Sep-2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக மீண்டும் தோழர் து.ராஜா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்


பாசிச அபாயம் பெருக்கி வரும் சூழலில் தோழர் து.ராஜா பொதுச்செயலாளராகத் தொடர்வது பொருத்தமானது. ‘75 வயதைக் கடந்தவர்கள் உயர் பொறுப்புகளை வகிக்கக் கூடாது’ என்ற விதியைத் தளர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தோழர் ராஜாவுக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறது. ஒருமனதாக இந்தத் தேர்வு நடைபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  


மார்க்சியத் தத்துவத்தில் தெளிவும், அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மீது கூர்மையான விமர்சனப் பார்வையும் ஒருங்கே கொண்ட மிகச்சிறந்த ஆளுமை தோழர் து.ராஜா ஆவார். 100 ஆண்டு கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது தலைமையில் மீண்டும் வலிமையோடு எழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.


- ரவிக்குமார் எம்.பி