அறிஞர் அண்ணா பிறந்தநாள்

Views : 11

பதிவு செய்த நாள் 15-Sep-2025

தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.


டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று அம்பேத்கரின் மதமாற்றத்துக்கு ஆதரவாக அண்ணா நற்சான்று அளித்தார். 


அறிஞர் அண்ணா பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். அவற்றுள் எந்த அண்ணாவை நாம் இப்போது முன்னிறுத்துவது? 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததைப்போல சனாதனம் தமிழ் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றையைச் சூழலில் நாம் முன்னிறுத்தவேண்டியது சனாதன இருளை அகற்றுவதற்காக அறிவுச் சுடர் ஏந்திய அண்ணாவைத்தான்.