திண்டிவனத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

Views : 15

பதிவு செய்த நாள் 13-Sep-2025

நகராட்சி ஊழியர் சி. முனியப்பன் அவமானப்படுத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று திண்டிவனத்தில் விசிக சார்பில் மாவட்டச் செயலாளர் திலீபன் ஒருங்கிணைத்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, தமிழ்மாநில பிஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 


தலைவர் எழுச்சித் தமிழர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 


===


12.09.2015 அன்று திண்டிவனம் வேதவல்லி அம்மாள் அறக்கட்டளைக் கட்டடத்தில் விசிக மாவட்டச் செயலாளர் திலீபன் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துகட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 


திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணி புரியும்

திரு சி.முனியப்பன் என்பவர் நகராட்சி அலுவலகத்துக்குள்ளேயே அவமானப்படுத்தப்பட்டுக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டும் நிலைக்கு ஆளாக்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில்

03.09.2025 அன்று திண்டிவனம் காவல் நிலையத்தில் குற்ற எண் 252/2025 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட ரம்யா க/பெ ராஜா, ராஜா, ரவிச்சந்திரன், காமராஜ், பில்லா செல்வம் மற்றும் சிலர் மீது BNS 2023 இன் பிரிவுகள் 

191 (2) 296 (b) 351 (2)133; மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

1989 பிரிவுகள் 3(1)(r), 3 (1) ( s) 3(2) ( va) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதியப்பட்டு 10 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் இனியும் தாமதிக்காமல் கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை இந்த அனைத்துக்கட்சிக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. “