உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை

Views : 12

பதிவு செய்த நாள் 09-Sep-2025

உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான இடத்தைத் தமிழ்நாடு அரசுக்குக் குத்தகைக்கு வழங்கச் சொல்லி பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்குத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. அதற்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு கடந்த 18.03.2025 அன்ரு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நான் கோரிக்கைக் கடிதம் அளித்து வலியுறுத்தினேன். 


தமிழ்நாடு அரசின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றப் பரிந்துரைக்குமாறு பாதுகாப்புத் துறை நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் அந்த நிலைக்குழுவின் தலைவர் திரு ராதா மோகன் அவர்களிடம் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடிதம் அளித்தார். நான் உடனிருந்தேன்.