திண்டிவனத்தில் சாதிய வன்கொடுமை

Views : 16

பதிவு செய்த நாள் 04-Sep-2025

திண்டிவனம் நகராட்சியில் சாதி அடிப்படையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நகராட்சி ஊழியர் முனியப்பன் அவர்களை சந்தித்து நடந்தவற்றைக் கேட்டறிந்தேன். உறுதியாக இருக்கும்படி அறிவுறுத்தினேன். 


மாலை 3 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். ஆகஸ்ட் 29 ஆம் தேதி சம்பவம் நடந்திருந்தாலும் இன்று 12 மணிக்குத்தான் புகார் அளிக்கப்பட்டதாகவும் உடனே எஃப் ஐ ஆர் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். சட்டரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். 


திண்டிவனம் நகராட்சியில் நகர்மன்றத் தலைவரும் கவுன்சிலர்களும் சாதிரீதியில் செயல்படுகிறார்கள் என்ற புகார் தொடர்ந்து இருந்துவந்தது. அதனால் அங்கு நியமிக்கப்படும் ஆணையர்கள்கூட அடிக்கடி மாற்றப்படும் நிலை. அதன் உச்சமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. 


முனியப்பன் எவ்வாறு மிரட்டப்பட்டார் என்பதற்கு சிசிடிவி ஆதாரம் இருப்பதால் குற்றமிழைத்தோர்மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முனியப்பனுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.  


- ரவிக்குமார் எம்.பி