வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம் - ரவிக்குமார்

Views : 23

பதிவு செய்த நாள் 26-Jul-2025

வாக்குரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையம்  - ரவிக்குமார் 


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 326, எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயதுக்குக் குறையாத மற்றும் அரசமைப்புச் சட்டத்தாலோ அல்லது எந்தவொரு சட்டத்தினாலோ சில காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்படாத ஒவ்வொரு குடிமகனும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமை உண்டு என்று அது கூறுகிறது.


தேர்தலில் வாக்களிக்கும் இந்த உரிமையானது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையாகும். ஒருவருக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்பது அரசமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள சமத்துவத்தின் செயல்பாட்டு வடிவமாகும். சமூக ஏற்றத் தாழ்வை வலியுறுத்தும் சனாதனவாதிகளுக்கு சமத்துவத்தை உருவாக்கும் எந்தவொரு சட்டமும் ஏற்புடையதல்ல. அதனால் அத்தகைய சட்டங்களையும், நடைமுறைகளையும் அவர்கள் மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள். தேர்தல் முறையில் ஒன்றிய பாஜக அரசு செய்ய முயலும் மாற்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவையே அழிப்பதாக உள்ளன. 


கட்டுரையை முழுமையாகப் படிக்க பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்துங்கள்

https://minnambalam.com/the-election-commission-is-taking-away-the-right-to-vote/