மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்

Views : 116

பதிவு செய்த நாள் 06-Jul-2025

மதிப்புக்குரிய நிதித்துறை செயலர் அவர்களுக்குக் கடிதம்

===


நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு நகராட்சிகளுக்கான வீட்டு வாடகைப்படி வழங்குதல் தொடர்பாக இன்று உயர்திரு. நிதித்துறை செயலாளர் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதன் விவரம் வருமாறு :


“ கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உட்பட ஒன்பது பேருராட்சிகளை நகராட்சியாக அரசு 2021 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. மேற்படி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாளிலிருந்து நகராட்சி எல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நகராட்சிகளுக்கான உயர்த்தப்பட்ட (HRA) வீட்டு வாடகைப்படியை உயர்த்தி வழங்காமல் உள்ளது. எனவே வீட்டு வாடகைப்படியை (HRA) நகராட்சிகளுக்கு வழங்குவதுபோல உயர்த்தி வழங்குமாறு அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கிறார்கள். இவர்களது கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

இணைப்பு: 1. அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மனு

பார்வை: 1. அரசாணை நிலை எண்: 94, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

நாள்: 01-11-2021

              2. அரசாணை நிலை எண்: 305, நிதித்துறை நாள்:13.10.2017 


இவண்

 

 

முனைவர் து.ரவிக்குமார்