பாஜக தனது கட்சி விதிகளிலிருந்து சோஷலிசம், செக்யூலரிசம் என்ற சொற்களை நீக்குமா?

Views : 22

பதிவு செய்த நாள் 01-Jul-2025

“ சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும், சோசலிசம், செக்யூலரிசம் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் மீதும் கட்சி உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கும், மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும்.” என பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளது. ( பார்க்க : இணைப்பில் உள்ள படம்) 


அரசமைப்புச் சட்டம் குறித்து பாஜகவின் அமைப்பு விதிகளில் கூறியிருப்பதை பாஜக உண்மையிலேயே மதிக்கிறதென்றால்  

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலிருந்து ‘சோஷலிசம்’ ‘செக்யூலரிசம்’ என்ற சொற்களை நீக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பதை அந்தக் கட்சியின் தலைவர்கள் கண்டித்திருக்க வேண்டாமா? அந்த சொற்களை நீக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தோல்வி அடைந்த
திரு சுப்பிரமணியசாமியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா? ஏன் அவ்வாறு செய்யவில்லை? 


அரசமைப்புச் சட்டத்தின்மீது சத்திய பிரமாணம் எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் பாஜக, “ சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் மீது கட்சி உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கும்” என்று அமைப்பு விதியில் வைத்துள்ள பாஜக, அந்தச் சொற்களை நீக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று சொல்லுமா? அல்லது, தனது கட்சி விதிகளிலிருந்து அந்த சொற்களை நீக்கவேண்டும்! 


- ரவிக்குமார் எம்.பி