தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் ( NMM) ரூ 4 லட்சம் விடுவிப்பு

Views : 265

பதிவு செய்த நாள் 09-May-2024

எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை


2.05.2024

பெறல்:

டாக்டர் அனிர்பன் டாஷ்

இயக்குனர்,

தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம்,

இந்திரா காந்தி தேசிய கலை மையம்,

அண்பாட்டு அமைச்சகம்,

ஜன்பத், புது தில்லி 110001

மதிப்பிற்குரிய ஐயா,

துணை: ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையம் - நிதி நல்கை நிறுத்தம் - தொடர்பாக

தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கத்துடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம், அக்டோபர் 2018 இல் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தை நிறுவியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் துறையில் 8000 பனை ஓலைச் சுவடிகளும் (தமிழ் மற்றும் பிற மொழிகளில்) மற்றும் 7200 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளும் உள்ளன. டிசம்பர் 2023க்குள், 3438 ஓலைச் சுவடிகளையும் 14 வருவாய் பதிவுகள் கொண்ட ஓலைச் சுவடிகளையும் அந்த மையம் வெற்றிகரமாகப் பாதுகாத்தது. இருப்பினும், சுமார் 11,000 ஓலைச் சுவடிகள் இன்னும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருக்கின்றன .

கோயில்கள், மடங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஓலைச் சுவடிகளை சேகரித்து, அந்த ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவும் ஓலைச் சுவடிகள் துறை உத்தேசித்துள்ளது.

 தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் 2019 முதல் 2022 வரை ரூ 16,03,998, அளித்தது. அதன் பின்னர் நிதிநல்கை நிறுத்தப்பட்டுள்ளது. ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தொடர்ந்து நிதிநல்கை கிடைக்கும் என நம்பி ஜனவரி 2024 வரை பணிபுரிந்தனர். நிதிநல்கை கிடைக்காததால், பணிகள் நிறுத்தப்பட்டன, அவர்கள் வேலைக்கு வருவதும் நின்றுவிட்டது. இப்போது அந்த மையத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.

தேசிய ஓலைச்சுவடிகள் இயக்கம் வழங்கிய சராசரி நிதிநல்கை ஆண்டுக்கு 3.30 லட்சம்தான். ஓலைச்சுவடிகளின்

 மதிப்பைக் கருத்தில் கொண்டு பார்த்தால் , மிகவும் சிறிய தொகையாகும்.

ஓலைச் சுவடிகள் பாதுகாப்புப் பணிகளைத் தொடரவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தைத் தொடர்ந்து நடத்திட பல்கலைக்கழகத்திற்கு உதவிடவும், உரிய நேரத்தில் நிதிநல்கையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,

முனைவர் து. ரவிக்குமார்


09.05.2024

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்துக்கு நிதி நல்கையைத் தொடர்ந்து வழங்குமாறு டெல்லியிலுள்ள தேசிய சுவடிகள் இயக்கத்தின் ( NMM) இயக்குநர் டாக்டர் அனிர்பன் டாஷ் அவர்களுக்குக் கடந்த 02.05.2024 அன்று கடிதம் எழுதினேன். தொலைபேசியிலும் தெரிவித்தேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்துக்கு ரூ 4 லட்சம் விடுவிக்கப்பட்டிருப்பதாக இன்று திரு அனிர்பன் டாஷ் தொலைபேசியில் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் ஓலைச் சுவடிகள் துறையின் பேராசிரியர் திருமதி கலா ஶ்ரீதர் அவர்களும் தொகை வந்திருப்பதை உறுதி செய்தார். திரு அனிர்பன் டாஷ் அவர்களுக்கு நன்றி!