ஜூன் 20: உலகப் புகலியர் நாள் - புகலியர் முகாம் மாணவர்களுக்கு நிதி உதவி

Views : 1514

பதிவு செய்த நாள் 20-Jun-2023

குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி ஈழத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கென சிறு நிதி உதவியை வழங்கினோம். கடலூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், விசிக நிர்வாகிகள் திருமார்பன், செந்தில், ஞானம், திருமேனி, ஜெயசீலன், வீர பொன்னிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர்