பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம், உயர்மட்டக்குழு அமைக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்

Views : 8

பதிவு செய்த நாள் 24-Mar-2023

பெருகிவரும் ஆயுதக் கலாச்சாரம், உயர்மட்டக்குழு அமைக்கவேண்டும்

நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்

“ ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின்படி, தலைமறைவாக இருக்கும் அம்ரித்பால் சிங் பஞ்சாபில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஊக்குவித்து, கிரிமினல் கும்பல்களுக்கு உதவுகிறார் எனத் தெரிகிறது. திரிசூலங்கள், வாள்கள் ஏந்திய கும்பல்கள், வன்முறையைத் தூண்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் செல்லும் காட்சிகளை இப்போது அடிக்கடி செய்திகளில் பார்க்கிறோம். இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய உயர்மட்டக் குழு ஒன்றை நியமிக்க வேண்டிய நேரம் இது. “ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது