ஐயா எல். இளையபெருமாள் நூற்றாண்டு: ஒன்றிய அரசு தபால் தலை வெளியிட வேண்டும்.

Views : 39

பதிவு செய்த நாள் 21-Mar-2023

ஐயா எல். இளையபெருமாள் நூற்றாண்டு: ஒன்றிய அரசு தபால் தலை வெளியிட வேண்டும்.

விதி 377 இன் கீழ் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினேன்

“தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தலித் தலைவர்களில் ஒருவரும் சமூக சீர்திருத்தவாதியுமான திரு எல். இளையபெருமாள் (1924-2005) அவர்களின் நூற்றாண்டு விழா ஜூன் 2023 இல் தொடங்குகிறது.

அவர் மூன்றுமுறை மக்களவை உறுப்பினராக இருந்தார். இந்தியாவில் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆராய முதலில் அமைக்கப்பட்ட தேசிய கமிஷனின் தலைவராக இருந்தவர்.

 நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது அறிக்கையை 1969 இல் சமர்ப்பித்தார்.

பட்டியல் சமூகத்தினரின் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கான மதிப்புமிக்க பரிந்துரைகளை வழங்கிய இந்த அறிக்கை பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்(வன்கொடுமைத் தடுப்பு) 1989 சட்டம் இயற்றப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்குப் பிறகு, நாடு முழுதும் பயணம் செய்து தலித்துகளின் துன்பங்களைக் கேட்டறிந்து அதற்காகக் குரல் கொடுத்த ஒரே தலைவர் அவர்தான். அவரது விலைமதிப்பற்ற சேவையை இந்திய ஒன்றிய அரசு அங்கீகரிக்கும் விதமாக அவரது நூற்றாண்டு விழாவை ஒன்றிய அரசு கொண்டாட வேண்டும், அவரது உருவம் தாங்கிய தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.