சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்

Views : 43

பதிவு செய்த நாள் 16-Mar-2023

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை

நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளேன்

“ ஐஐடி-மெட்ராஸில் மூன்றாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் வைப்பு புஷ்பக் ஸ்ரீ சாய், தனது ஹாஸ்டல் அறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார். ஆந்திராவைச் சேர்ந்த அவர் வளாகத்தில் உள்ள அழகானந்தா விடுதியில் தங்கி இருந்தார். மெட்ராஸ் ஐஐடியில் ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது தற்கொலை சம்பவம் இதுவாகும். பிப்ரவரி 13 ஆம் தேதி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீவன் என்ற எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் தற்கொலைகள் ஐஐடி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுகிறது. இதற்கு உயர்மட்ட விசாரணை தேவை” என ஒத்திவைப்புத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

- ரவிக்குமார் எம்.பி