குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் அவர்கள்

Views : 601

பதிவு செய்த நாள் 25-Jul-2022

குடியரசுத் தலைவராக இன்று மாண்புமிகு துரௌபதி முர்மு அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு ரமணா அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையை இந்தியில் ஆற்றினார். தனது எளிய பின்னணியை விவரித்திருக்கிறார். “ நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒடிஷாவின் சிறிய பழங்குடி கிராமம் ஒன்றில் நான் எனது பயணத்தைத் துவக்கினேன். ஆரம்பக் கல்வி பெறுவதேகூட ஒரு கனவாக இருந்த சமூகப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். பல்வேறு தடைகள் இருந்தாலும் எனது மன உறுதியால் எனது கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றேன். நான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள். ஒரு வார்டு கவுன்சிலராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். இதுதான் ஜனநாயகத்தின் தாயாகத் திகழும் இந்தியாவின் பெருமை. “ எனக் குறிப்பிட்டுள்ள அவர் , ராய்ரங்பூர் என்னுமிடத்தில் இருக்கும் ஶ்ரீ அரவிந்தர் ஒருங்கிணைந்த பள்ளியில் தான் ஆசிரியராகப் பணி புரிந்ததை நினைவுகூர்ந்து இன்னும் சில நாட்களில் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதையும் கல்வி குறித்த அரவிந்தரின் சிந்தனைகள் தனக்கு ஆதர்சமாக இருந்துவருவதையும் குறிப்பிட்டிருக்கிறார். “ ஆயிரக் கணக்கான ஆண்டுகளோடு இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடி மரபில் பிறந்தேன். வனங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எனது வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். நாம் இயற்கையிலிருந்து அவசியமான வளங்களை எடுத்துக்கொள்வோம். அதே மரியாதையுடன் இயற்கைக்கு சேவை செய்வோம். இந்தப் புரிதல் இப்போது உலகளாவிய தேவையாக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகத்துக்கு வழிகாட்டுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மாண்புமிகு முர்மு அவர்கள், கல்வி நிறுவனங்களோடு தனக்கிருந்த நெருக்கமான உறவைத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பக் கல்வியே கனவாக இருந்த முர்மு அவர்கள் தனது விடா முயற்சியால் கல்லூரிக்குப் போனதைப்போல இந்தியாவில் உள்ள அனைத்து பழங்குடிப் பெண் குழந்தைகளும் கல்லூரிக் கல்விவரைத் தடையின்றி பெற வேண்டும். அதற்கு, தனது அதிகாரத்தை அவர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும் என வாழ்த்துகிறேன்! குடியரசுத் தலைவர் அவர்கள் தனது உரையை இந்தியில் ஆற்றினார். தனது எளிய பின்னணியை விவரித்திருக்கிறார். “ நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒடிஷாவின் சிறிய பழங்குடி கிராமம் ஒன்றில் நான் எனது பயணத்தைத் துவக்கினேன். ஆரம்பக் கல்வி பெறுவதேகூட ஒரு கனவாக இருந்த சமூகப் பின்னணியிலிருந்து வந்தவள் நான். பல்வேறு தடைகள் இருந்தாலும் எனது மன உறுதியால் எனது கிராமத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றேன். நான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவள். ஒரு வார்டு கவுன்சிலராக இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். இதுதான் ஜனநாயகத்தின் தாயாகத் திகழும் இந்தியாவின் பெருமை. “ எனக் குறிப்பிட்டுள்ள அவர் , ராய்ரங்பூர் என்னுமிடத்தில் இருக்கும் ஶ்ரீ அரவிந்தர் ஒருங்கிணைந்த பள்ளியில் தான் ஆசிரியராகப் பணி புரிந்ததை நினைவுகூர்ந்து இன்னும் சில நாட்களில் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதையும் கல்வி குறித்த அரவிந்தரின் சிந்தனைகள் தனக்கு ஆதர்சமாக இருந்துவருவதையும் குறிப்பிட்டிருக்கிறார். “ ஆயிரக் கணக்கான ஆண்டுகளோடு இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடி மரபில் பிறந்தேன். வனங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எனது வாழ்வில் உணர்ந்திருக்கிறேன். நாம் இயற்கையிலிருந்து அவசியமான வளங்களை எடுத்துக்கொள்வோம். அதே மரியாதையுடன் இயற்கைக்கு சேவை செய்வோம். இந்தப் புரிதல் இப்போது உலகளாவிய தேவையாக மாறியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகத்துக்கு வழிகாட்டுவதாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள மாண்புமிகு முர்மு அவர்கள், கல்வி நிறுவனங்களோடு தனக்கிருந்த நெருக்கமான உறவைத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பக் கல்வியே கனவாக இருந்த முர்மு அவர்கள் தனது விடா முயற்சியால் கல்லூரிக்குப் போனதைப்போல இந்தியாவில் உள்ள அனைத்து பழங்குடிப் பெண் குழந்தைகளும் கல்லூரிக் கல்விவரைத் தடையின்றி பெற வேண்டும். அதற்கு, தனது அதிகாரத்தை அவர் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும் என வாழ்த்துகிறேன்!