கீழ்ப்புத்துப்பட்டு ஈழத் தமிழ் அகதிகள் முகாம்: ரவிக்குமார் எம்.பி கடிதத்தின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Views : 998

பதிவு செய்த நாள் 08-Jul-2022

விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் போதுமானவையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கடந்த 21.06. 2021 ஆம் நாளன்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதி இருந்தார்.அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு துணைச் செயலாளர் திரு மா. பிரதீப் குமார் IAS உத்தரவிட்டுள்ளார். 

"அகதிகள் நலனுக்காக தரமான வீடுகள் கட்டித் தருதல், போதிய கழிப்பறை வசதிகள் செய்து தருதல், நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்துதருதல் என்பன உள்ளிட்ட பலவாறான கோரிக்கைகளை மனுதாரர் அரசுக்கு முன்வைத்துள்ளார். இப்பொருண்மை தொடர்பாக அரசுக்கு விரிவான கருத்துருவை அனுப்பி வைக்குமாறு” அகதிகள் மறுவாழ்வு இயக்குநருக்கு அவர் அனுப்பிய ஆணையின் (கடித எண். 20738/ ம. வா. 2/2021-1 நாள். 02.07.2021) நகல் ரவிக்குமார் எம்.பிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இணைப்பு : அரசு துணைச்செயலாளரின் கடிதம்