ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை

Views : 911

பதிவு செய்த நாள் 09-Dec-2020

ஆலங்குப்பம் கிராமத்தின் அவலநிலை

மரக்காணத்துக்கு அருகில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் இரண்டு தெருக்களில் உள்ள 75 வீடுகளில் மழை வெள்ளம் உள்ளே புகுந்துள்ளது. அருகிலுள்ள ஆலங்குப்பம் ஏரி நிறைந்துவிட்டதால் இந்தத் தெருக்களிலுள்ள வீடுகளின் உள்ளே தண்ணீர் ஊற்றெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அந்த வீடுகளில் பெரும்பாலானவை 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாகும். அவை பெரும்பாலும் இடிந்து சிதிலமடைந்து உள்ளன. அவற்றை இடித்துவிட்டுப் புதிதாக தொகுப்பு வீடுகளைக் கட்டித்தர தமிழக அரசு முன்வரவேண்டும்.

- ரவிக்குமார் எம்.பி