திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா?

Views : 908

பதிவு செய்த நாள் 09-Dec-2020

திமுககாரர் என்பதால் முதியோர் உதவித்தொகை நிறுத்தமா?

திமுகவில் சேர்ந்ததால் தனக்கு வந்துகொண்டிருந்த முதியோர் உதவித் தொகையையும், விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் உதவித் தொகையையும் நிறுத்தி விட்டார்கள் என்று முதியோர் ஒருவர் என்னிடம் புகார் அளித்தார்.

இன்று நான் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை கல்லமேடு கிராமம் ஆண்டிக்குழி மதுராவைச் சேர்ந்த தர்மலிங்கம் த/பெ குப்புசாமி படையாட்சி என்ற அந்த முதியவர் இதுவரை வங்கிக் கணக்கின் மூலமாகவே உதவித் தொகையைப் பெற்று வந்ததாகவும் இப்போது ஆதார் இல்லாததால் நிறுத்தி விட்டோம் என்று சொல்கிறார்கள் அது உண்மையான காரணம் அல்ல என்றும் கூறினார். கட்டை விரலின் ரேகை இல்லாத காரணத்தினால் ஆதார் அட்டை தனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவித்தொகை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளேன்.

- ரவிக்குமார் எம்.பி