பிரதமர் அறிவித்துள்ள ‘’மக்கள் ஊரடங்கு’ கொரொனாவைத் தடுக்குமா?

Views : 1054

பதிவு செய்த நாள் 19-Mar-2020

மக்கள் ஊரடங்கு - பிரதமரின் அறிவிப்பு : சில கருத்துகள் 


கொரனா தொற்று இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு முன்னுரிமை தராமல், தான் சொல்வதற்கு மக்கள் கட்டுப்படுகிறார்களா என சோதிப்பதற்கு முன்னுரிமை தந்துள்ளார் பிரதமர். 


கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைத்திருக்கிற லாபத்தை வழக்கம்போல கார்ப்பரேட் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குப் பயன்படுத்தாமல் கொரொனாவால் பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு உதவ மத்திய அரசு முன்வரவேண்டும்.


ஐந்துபேருக்குமேல் கூடக்கூடாது என டெல்லி அரசு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ள நிலையில் சுமார் 5 ஆயிரம் பேர் கூடுவதற்கு வகைசெய்வதுபோல நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவது சரியா? 


கொரானா வராமல் தடுக்க மாட்டு சாணியைப் பூசவேண்டும்,மாட்டு மூத்திரத்தைக் குடிக்கவேண்டும் என அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்புவோரால் கொரொனா பலருக்கும் தொற்றக்கூடிய ஆபத்து உள்ளது. இதை பிரதமர் கண்டித்திருக்கவேண்டும்


பொருளாதார உதவிக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமின்றி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகள், வீடற்ற நாடோடிப் பழங்குடியினர் முதலானவர்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் 


நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும்போது பிரதமர் நாட்டு மக்களுக்கான அறிவிப்புகளை அங்கே செய்யாமல் டிவி மூலம் செய்திருப்பது வியப்பளிக்கிறது.


( 19.03.2020 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி பேசியவற்றில் சில கருத்துகள்)